பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் நடைபெற்று வரும் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம்,கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் என மொத்தம் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
ஆனால்,ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் வந்து செல்வதற்கு பல்வேறு வகையான பிரச்சனைகள் உள்ளது.குறிப்பாக இட வசதி, வாகனங்கள் நிறுத்தக்கூடிய வசதி உள்ளிட்டவை இல்லாமல் இந்த நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.இதனால் வழக்கறிஞர்கள்,காவலர்கள், நீதிபதிகள்,பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினார்கள் பல்வேறு வகையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, சென்னை-கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்செட்டியில் 6.35 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதற்கு ரூ.49.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.எனவே,நாலு மாடிகளுடன்,ஆறு நீதிமன்றங்களுக்கான கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. எனவே,இப்பணியை 2024 ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டுமான பணி துவக்கி வைக்கப்பட்டது.இப்பணிகளை 18 மாதங்களில் நிறைவேற்ற வேண்டும்.இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஏடிஎம் மையம், தபால் நிலையம்,கேண்டீன் ஓய்வரை,கழிவறை வசதி,வாகன நிறுத்துமிடம், நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் அகலமான சாலை வசதி உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன் இப்பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,நேற்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், பொன்னேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான துரை.சந்திரசேகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமான பணிகளை திடீரென ஆய்வு செய்தார். மேலும்,குறித்த காலத்தில் இந்த கட்டுமான பணிகளை சிறப்பாக செய்து முடிக்கவேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியின்போது பொன்னேரி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர்கள் ஜெகதீஷ்,தர்மதுரை, ஒப்பந்ததாரர் தீனதயாளன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
No comments