கும்மிடிப்பூண்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 வது பிறந்த நாள் விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூர் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே கழக கொடி ஏற்றியும் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி இனிப்புகள் வழங்கி காலை உணவு வழங்கி கொண்டாடினர்கள்.
இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமை நடைபெற்றது முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு முன்னாள் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.எம்.எஸ் சிவக்குமார் பொதுக்குழு உறுப்பினர் அபிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளரும் கவுன்சிலர்மான எஸ்.டி.டி.ரவி செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இமய மனோஜ், எம்.எஸ்.எஸ்.சரவணன், ஓடை.ராஜேந்திரன் முல்லைவேந்தன் புருஷோத்தமன் சேதுபதி மனோகர் பாசறை சரவணன் எம் எஸ் எஸ் வேலு.புது கும்முடிபூண்டி நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய முன்னாள் ஒன்றி கவுன்சிலர் கணபதி,சி. ராமலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் புது கும்மிடிப்பூண்டி. ராஜா.மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் புது கும்மிடிப்பூண்டி அம்மா பேரவை துணைச் செயலாளர் சுகுமாரன் தலைமையில் ஜெயலலிதாவின் திருவருள் படத்திற்கு மாலை அணிவித்து ஏழை பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து சுண்ணாம்புகுளம் பகுதியில் மாவட்ட துணை செயலாளர் எஸ் எம் ஸ்ரீதர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது எகு மதுரை ஊராட்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் டி. சி. மகேந்திரன் தலைமையில் 300 பெண்களுக்கு புடவை இனிப்புகள் வழங்கி வழங்கினார்.
No comments