• Breaking News

    செங்கல்பட்டு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது



    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பொருளாளர் ஆர். சங்கர்கணேஷ் ஏற்பாட்டில், மாடம்பாக்கம் பகுதி கழகச் செயலாளர் எம். தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாமை, கழக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் பி. வேணுகோபால், மாவட்ட கழகச் செயலாளர்  சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே. எம். சின்னையா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    மாவட்ட அவைத் தலைவர் பொன்னுசாமி,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், கழக இலக்கிய அணி துணைச் செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன், தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் ஜி. சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே. பி. காசி ராஜபாண்டியன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ஆர். பாலாஜி ஸ்ரீகாந்த்,காஞ்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சபரிஷ் மணிகண்டன்,பகுதி கழக செயலாளர்கள் எம். கூத்தன், பம்மல் பா அப்பு(எ) வெங்கடேசன்,   இரா. மோகன், எல்லார் செழியன், அனகை பி. வேலாயுதம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஜி. எஸ். புருஷோத்தமன், ஜி.எம் சாந்தகுமார், மாமன்ற உறுப்பினர் அ. கிருஷ்ணமூர்த்தி, விஜயநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    No comments