• Breaking News

    ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.7000-க்கு விற்பனை.....

     


    தமிழ்நாட்டில் வரத்து குறைவு மற்றும் பனிப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மல்லிகை பூவின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக முகூர்த்த நாள் என்பதால் இன்று விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    அதாவது நேற்று மதுரையில் ஒரு கிலோ மல்லிப்பூ 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ 7000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதே போன்று முல்லைப்பூ, பிச்சி மற்றும் ரோஜா ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

    No comments