• Breaking News

    ஆளில்லாத வீட்டுக்கு ரூ.7 1/2 லட்சம் மின் கட்டணம்.... பூ வியாபாரி அதிர்ச்சி

     


    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு குல்லிசெட்டிபட்டி பகுதியில் உள்ளது. அந்த வீடு கடந்த 2 வருடங்களாக ஆளில்லாமல் பூட்டி கிடந்தது. 

    இந்த வீட்டை முருகேசனின் உறவினர் ரவிச்சந்திரன் பராமரித்து வந்த நிலையில் அவர் அந்த வீட்டுக்கு 120 முதல் 150 ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.இந்நிலையில் திடீரென ரவிச்சந்திரன் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ரூ.7 லட்சத்து 46 ஆயிரத்து ஒரு ரூபாய் மின்சார கட்டணம் வந்துள்ளது எனவும் அதனை அடுத்த மாதம் 17ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டார். மேலும் அப்போது தவறுதலாக மெசேஜ் வந்துவிட்டது என தெரிவித்தனர்.

    No comments