60 வயதிலும் குதிரையை விட வேகமாக ஓடும் பாபா ராம்தேவ்
யோகா குரு பாபா ராம்தேவ், தனது 60 வயதிலும் இளைஞர்களை விட அதிக சக்தி மற்றும் சகிப்புத்தன்மை (stamina) உடையவர் என்பதை நிரூபிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், பாபா ராம்தேவ் வெள்ளை நிறக் குதிரை ஒன்றின் பக்கத்தில் அதிவேகமாக ஓடி, அந்தப் போட்டியில் வெற்றி பெறுகிறார். இந்த அபார சக்திக்கான ரகசியம் “ஷிலாஜித்” (Shilajit) என அவர் கூறுகிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (swaamiramdev) பிப்ரவரி 18ஆம் தேதி பதிவேற்றப்பட்டது. இதனைப் பார்த்த வலைதள பயனர்கள் “அசாத்திய உடல் சக்தி”, “பாபா ராம்தேவின் ஃபிட்னஸ் பைத்தியம்”, “இந்த வயதில் இந்தளவு ஆற்றல்!” போன்ற கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பாபா ராம்தேவ் இந்த வீடியோவின் மூலம், பத்தஞ்சலி நிறுவனத்தின் “ஸ்வர்ண ஷிலாஜித்” மற்றும் “இம்யூனோகிரிட் கோல்ட்” ஆகிய ஆயுர்வேத பொருட்களின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். ஷிலாஜித் உடல் சகிப்புத்தன்மையை அதிகரிக்க, ஆற்றல் அளிக்க, வயதை தடுக்க, சோர்வை நீக்க மற்றும் முழு உடல் வலிமையை அதிகரிக்க பயன்படுகிறது என அவர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது 22,000-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளதோடு, தொடர்ந்து பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இவ்வளவு வயதிலும் இவருக்கு உள்ள உடல் ஆரோக்கியம் பாராட்டதற்குரியது என நெட்டிசன்கள் பாபா ராம்தேவின் ஃபிட்னஸ்சை வியந்து பாராட்டி வருகின்றனர்.
No comments