சீமானுக்கு ஆண்மை பரிசோதனை...... குற்றம் உறுதியானால் 6 வருடம் ஜெயில்..?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னதாக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். சீமான் தன்னுடைய முன்னாள் கணவர் என்று விஜயலட்சுமி கூறும் நிலையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு அந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக விஜயலட்சுமி கூறிய நிலையில் போலீசாரும் அந்த வழக்கை முடித்து வைக்க பின்னர் மீண்டும் அந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறினார்.
இந்நிலையில் விஜயலட்சுமி தன்மீது தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் கண்டிப்பாக வழக்கை திரும்ப பெற முடியாது என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றம் சீமானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு என்பது மிகவும் தீவிரமானது என்று கூறியது. அதை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது.
விஜயலட்சுமியின் வாக்குமூலத்தை வைத்து பார்க்கும் போது சீமானின் வற்புறுத்தலால் 6 முதல் 7 முறை வரை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. நடிகை விஜயலட்சுமியிடமிருந்து சீமான் பெருந்தொகையை பெற்றுள்ள நிலையில் சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்பப் பிரச்சனை மற்றும் திரைத்துறை பிரச்சனையால் தான் விஜயலட்சுமியின் குடும்பம் சீமானை அனுகியுள்ளது. அப்போதுதான் திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் உறவு வைத்துள்ளார். எனவே இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
அதன்பிறகு இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் சீமானுக்கு விஜயலட்சுமி கொடுத்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அதன்படி பிப்ரவரி 27ஆம் தேதி காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் சீமானுக்கு ஆண்மை மற்றும் குரல் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். அதாவது விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்யும்போது கணவன் என்ற இடத்தில் சீமான் கையெழுத்து போட்டது தற்போது மிகப்பெரிய ஆதாரமாக இருக்கிறது. இதன் காரணமாக சீமான் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கிட்டத்தட்ட 6 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த வழக்கை அவ்வளவு எளிதில் சும்மா விட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் கண்டிப்பாக இந்த வழக்கில் சீமான் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்வார் என்று கூறப்படுகிறது.
No comments