தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 5 வருடங்களில் வசூலிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு..?
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்திலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் தற்போது சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு பாஸ்ட் டேக் முறையில் ஓட்டுனரின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக கட்டணத்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணம் குறித்து மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமே சுங்க கட்டணமாக ரூபாய் 15, 678 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 70 தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அதில் 21 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் கடந்து 3 ஆண்டுகளில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
No comments