முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பெருங்களத்தூர் பகுதி 58வது வட்ட சார்பில் கல்வெட்டு திறப்பு விழா, கொடியேற்றி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட இணை செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு டி.பிரசாந்த், 58வது வட்ட துணைச் செயலாளர் டி.மதன்குமார் ஏற்பாட்டில் கல்வெட்டு திறப்பு விழா, கொடியேற்றி அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் கலந்துகொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து கல்வெட்டு திறந்து வைத்து அன்னதானம் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் டி.கே.எம் சின்னையா, பெருங்களத்தூர் பகுதி கழகச் செயலாளர் ஜெ.சீனு பாபு , ஸ்ரீகாந்த், சீனிவாசன், நாராயணன், முருகன், பஜ்ஜி முருகன், சச்சின், குட்டி, வடிவேலுன், அஜித் குமார், பரந்தாமன், சரவணன், மோகன்தாஸ், நடராஜன், ராஜாராம், விநாயகம், ரகுபதி, வெங்கடேசன், மோகன், பாஸ்கர், குமார் உள்ளிட்ட பகுதி கழக நிர்வாகிகள் வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments