கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56 ஆம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் கும்மிடிப்பூண்டியில் உள்ள பேரறிஞர் அண்ணா 56.வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ கோவிந்தராசன் ஆனைக்கி இணங்க கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் அறிவழகன் மாணவரணி துணை அமைப்பாளர் டி.ஜெ.ஜி.தமிழரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அண்ணாவிற்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் ரமேஷ் சுற்றுச்சூழல் ஆணி பாஸ்கர் பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி தொகுதி கவரப்பேட்டை தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் கே வி ஆனந்தகுமார் தலைமையில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் திருமலை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொன்னேரியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் இதில் நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் இளைஞர் அணி இணை செயலாளர் தீபன் வாசுதேவன் ராமலிங்கம் மார்ட்டின் நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மீஞ்சூரில் நடைபெற்ற அண்ணா நினைவு நாளை ஒட்டி பேருந்து நிலையத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் இதில் மீஞ்சூர் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments