• Breaking News

    பேரறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் சமபந்தி போஜனம் நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரி முருகன் கோவில் துணை ஆணையர் திருஞானம் மற்றும் கோவில் ஆணையர் மாதவன் முன்னிலையில் பேரறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளை யோட்டி சமபந்தி போஜனம் நடைபெற்றது.

      பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சோழவரம் ஒன்றிய செயலாளர் வைதைகை. நா.செல்வசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறுவாபுரி பாலசுப்ரமணியம் சுவாமியை தரிசனம் செய்தனர்.பின்னர்  சமபந்தி போஜனம் நடைபெற்றது.

    இதில்  பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.இதில் சிறுவாபுரி ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர், கோவில் நிர்வாகிகள் சுப்பிரமணி,வாசு, நடராஜ், மணிமாறன், சுதாகர், மனோஜ்,  மாவட்ட செயலாளர் உதவியாளர் யுவராஜ், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் கழக நிர்வாகிகள் காங்கிரஸ் பிரமுகர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

    No comments