• Breaking News

    தேனி: விவசாய நிலங்களில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

     


    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ. அம்பாசமுத்திரம் என்ற குரும்ப பட்டி என்ற கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களின் நிலங்களில் கடந்த ஒரு வருடமாக தோட்டங்களில்  உள்ள மின் மோட்டார்கள், மின் வயர்கள், சொட்டுநீர் பைப்புகள் போன்ற சுமார் 50 லட்சம் மதிப்புள்ள பொருள்களை   குறிவைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து இப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும்  உத்தமபாளையம் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு வழக்கறிஞர் கார்த்திக் அவர்களின் தலைமையில் இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜித் சிங் அவர்களிடம் நேரில் மனு அளித்து மர்ம நபர்கள் மீது காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

    No comments