• Breaking News

    தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவு.... அனகாபுத்தூர் பகுதியில் ஐந்து இடங்களில் கொடியேற்றி 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


    செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கி ஒரு வருட நிறைவை தொடர்ந்து  அனகாபுத்தூர் பகுதியில் அனகாபுத்தூர் பகுதி தலைவர் எஸ்.எம்.மதன்  தலைமையில் ஐந்து இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஆர்.பிரபா, பகுதி துணை தலைவர் எம்.சூர்யா, 1வது வட்டத் தலைவர் எம்.துளசிராம், 2வது வட்டத் தலைவர் வி.ஹேமத்குமார், 4வது வட்டத் தலைவர் இ.பிரபு, 1வது வட்டத் செயலாளர் ஏ.யுவராஜ், 1வது, 2வது, 3வது, 4வது வட்ட நிர்வாகிகள் சார்பில் செய்திருந்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் மின்னல் குமார், கழக இணை ஒருங்கிணைப்பாளர் சமூக ஊடகப்பிரிவு அறிவானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.மதன், மாவட்ட மகளிர் அணி தலைமை ஐஸ்வர்யா மதன் ஆகியோர் கலந்து கொண்டு ஊர்வலமாக மேளத்தளத்துடன் சென்று கட்சி கொடி ஏற்றி வைத்து சுமார் 500 நபர்களுக்கு மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள் இதில் பகுதி நிர்வாகிகள் இளைஞர் அணி மகளிர் அணி மாணவர் அணி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments