நாகை அருகே ஆபரணதாரி கிராமத்தில் 50 வருடத்திற்க்கு பிறகு குட முழுக்கு வெகு விமர்சியாக நடைப்பெற்றது..... திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
நாகப்பட்டினம் மாவட்டம் ஆபரணதாரி கிராமத்தில் எழுந்தருனிக்கும் அ/மி ஸ்ரீ அபீதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக. பிப்ரவரி 20 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் ஆரம்பித்து யாக சாலையில் மகா பூர்ணஹூதி நடைபெற்று கோ பூஜை, ஹோமங்கள் பரிவாரண தீப ஆராதனைகள் நடைபெற்று சிவாச்சாரிகள் கடங்கள் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக உட்புற புறப்பாடு நடைபெற்று பிறகு மூலவர் விமானத்தில் புண்ணிய நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது. திரளான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என மந்திர முழக்கத்தோடு ஹர ஹர சிவனே என்று வழிபட்டனர். மற்றும் மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது ஆபரணதாரி சுற்றி உள்ள. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் : ஜி.சக்கரவர்த்தி
No comments