மதுரை: கிரில் சிக்கன் சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஐந்து பேர் கிரில் சிக்கன் சாப்பிட்டனர். சிக்கன் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 5 பேருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று நேரடியாக ஆய்வு செய்துள்ளனர். பின்னர் உணவு மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
No comments