திண்டுக்கல் பழைய நீதிமன்றம் வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து விபத்து..... 4 பேருக்கு காயம்
திண்டுக்கல் பழைய நீதிமன்றம் தற்போது அரசு செவிலியர் பயிற்சி பள்ளியாக உள்ளது.இந்நிலையில் அந்த வளாகத்தில் உள்ள மரம் முறிந்து விழுந்து முதியவர் மற்றும் 3 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களுக்கு தகவல் தெரிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
No comments