மகா கும்பமேளா.... பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. திரிவேணி சங்கமத்தில் நூற்றுக்கணக்கானோர் இதுவரை நீராடியுள்ளனர். இந்த விழா மொத்தம் 46 நாட்கள் நடைபெறும். சமீபத்தில் தை அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் கூறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி அப்போது 30 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை கூடுதலாக 18 உயர்ந்துள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் உத்திரபிரதேச மாநில அரசுக்கு தகுதி இல்லை எனவும் இராணுவத்தை மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் இறக்க வேண்டும் எனவும் கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments