• Breaking News

    ஶ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேன்நிலை பள்ளி 47வது ஆண்டு விழா நடைபெற்றது


    செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் பழைய தாம்பரம் தெற்கு தெருவில் அமைந்துள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேன்நிலை பள்ளி 47வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைவர் ஶ்ரீ ராமகிருஷ்ணா கல்வி அறக்கட்டளை எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, சிறப்புரையாற்றினார்.

    உடன் 4வது மண்டல குழுத்தலைவர் டி.காமராஜ், 5வது மண்டல குழுத்தலைவர் எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர் டி.ஆர்.கோபி, பள்ளி செயலர் டி.எஸ்.ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    No comments