• Breaking News

    கிழக்கு தாம்பரம் விசிரிமல் புக் ராஜ் போரா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 43 ஆம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது


    தாம்பரம் அடுத்த சேலையூரில் கிழக்கு தாம்பரம் விசிரிமல் புக் ராஜ் போரா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 43ஆம் ஆண்டு விழா தலைமை ஆசிரியர் ஈஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக 5வது மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் சரிதா ஜோ, செங்கல்பட்டு உடற்கல்வி ஆய்வாளர் திருவாளர் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ஊக்குவிக்கும் வகையில் நல்ல அறிவுரைகளை வழங்கினார்கள்.

     அதனை தொடர்ந்து பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் 46வது மாமன்ற உறுப்பினர் ரமணி ஆதிமூலம், 48வது மாமன்ற உறுப்பினர் சசிகலா கார்த்தி, லைன் கிளப் சுரேஷ்குமார், எஸ்.எம்.சி.தலைவர் நல்லது லிங்கம், பி.டி.ஏ தலைவர் உஷா ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மாணவிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    No comments