வீடு புகுந்து வாலிபரை கொலை செய்த கும்பல்..... மனைவி, பணிப்பெண் உள்பட 4 பேர் கைது.....
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிறுநாத்தூர் மதுரா சாலையூகிராமத்தில் கார்த்திகேயன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இ சேவை மையம் நடத்தி வந்த கார்த்திகேயன் கடந்த 28ஆம் தேதி வீட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பைனான்சியரான சுரேஷ் என்பவர் முன் விரோதம் காரணமாக கார்த்திகேயனை கொலை செய்தது தெரியவந்தது. சுரேஷிடம் ஒரு சிலர் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர்.
அப்போது கார்த்திகேயன் அவர்களிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கி விட்டீர்கள். மெதுவாக திருப்பி செலுத்துங்கள் என கூறினாராம். இப்படி ஒரு சில காரணங்களால் தகராறு ஏற்பட்டது. அதனை மனதில் வைத்துக் கொண்டு சுரேஷ் திட்டம் போட்டு கூட்டாளிகளுடன் இணைந்து கார்த்திகேயனை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ், அவரது மனைவி லலிதா, அவர்களது வீட்டில் வேலை பார்க்கும் அபிமா, விக்கி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments