• Breaking News

    சென்னை: ரோடு ரோலர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்

     


    சென்னை எண்ணூரில் உள்ள ஒரு மேம்பாலத்தில் ரோடு ரோலர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழியாக நேற்று இரவு மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதாவது எண்ணூர் வழித்தடம் செல்லக்கூடிய பேருந்து கத்திவாக்கம் மேம்பாலம் வழியாக பணிமனைக்கு சென்றது. அப்போது  ரோடு ரோலர் மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமான நிலையில் நர்கீஸ் (20), தனலட்சுமி (45), சுனிதா (19) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    அதன் பிறகு 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த பகுதியில் சாலை பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட ரோடு ரோலர் கிட்டத்தட்ட ஒருவார காலமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    No comments