• Breaking News

    விருதுநகர் அருகே விபத்து.... சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

     


    மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே இன்று அதிகாலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி லாரி அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் 3 பேர்‌ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.அதன்பிறகு மினி லாரியில் இருந்த ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    No comments