35 ஊழல் அமைச்சர்கள் சிறை செல்வார்கள் - அண்ணாமலை
சென்னையில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் இந்த வருடம் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் குறைந்தபட்சம் 60 லட்சம் பேர் பயனடைகின்றனர். தாய்மொழியில் தமிழக மாணவர்கள் மிகவும் பின்தங்கி உள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. தமிழ் மொழியை சொல்லிக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கும் திமுக இதற்கு வெட்கப்பட வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்ல வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களிலும் தமிழ் பல்கலைக்கழகங்கள் தொடங்க வேண்டும். தமிழக அரசு அந்த முயற்சியை மேற்கொண்டால் அதற்கான நிதியை மத்திய அரசிடம் பாஜக பெற்று தரும். 2026 ஆம் ஆண்டில் 35 ஊழல் அமைச்சர்களும் சிறைக்குச் செல்வார்கள். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். தமிழிசை தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.
அந்தக் குழு இந்தியா முழுவதும் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்குச் சென்று முதல்வர்களை சந்திக்க உள்ளது. அங்குள்ள மக்களின் நலத்திட்டங்களை பார்த்துவிட்டு 2026 ஆம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையை தயார் செய்யும். தமிழகத்தை விட தற்போது மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மகளிர் உரிமை தொகை அதிகம் வழங்கப்படுகிறது. எனவே 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை பெண்களுக்கு அதிகம் வழங்கப்படும் என்று அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.
No comments