புளியங்குடியில் 302 வது இலவச கண் சிகிச்சை முகாம்
தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க நிதியுதவியுடன் சிந்தாமணி ராஜகோபால் நாயக்கர் அறக்கட்டளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் 302வது இலவச கண் சிகிச்சை முகாம் வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சிந்தாமணி (புளியங்குடி) R.C. நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆங்கில மாதமும் முதல் சனிக்கிழமை அன்று நடைபெறும் இந்த முகாமில் வருபவர்களுக்கு கண் புரை ஆபரேஷன் இலவசமாக செய்யப்படுகிறது. முகாமிற்கு வருபவர்கள் ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் செல் நம்பர் கொண்டு வருவது அவசியம். கூடுதல் விபரம் தேவைப்படுபவர்களுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.
9487941552 - 9865493488 - 9942505005.
No comments