• Breaking News

    கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்கு தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மயிலாடுதுறை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு


    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் சரகம், குத்தாலம் தோப்பு தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் தினேஷ்.இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜேசிபி வாகனத்தில் குத்தாலம் மீனாங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது,குத்தாலம் காந்தி நகரை சேர்ந்த குருசாமி மகன் சரவணன் என்பவர் ஜேசிபி வாகனத்தை மெதுவாக ஓட்டி செல்லுமாறு கண்டித்துள்ளார்.

    அப்போது தினேஷ் என்பவர் வாகனத்தை மெதுவாக தான் ஒட்டி செல்கிறேன் என்று பதிலளித்தபோது இருவருக்கும் இடையே வாய்தகறாறு ஏற்பட்டு கலைந்து சென்றுவிட்டனர்.இந்த முன்விரோதம் காரணமாக அன்று மாலை மேற்படி தினேஷ் மற்றும் அவரது தந்தை நடராஜன் ஆகியோர் குத்தாலம் கடைவீதிக்கு தங்களது இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தபோது சரவணன்,அவரது சகோதரர் ஆபேல்,ஜெயவீரன்,ஆகியோருடன் சேர்ந்து வழிமறித்து ஆபாச வார்த்தைகளால் திட்டியும் தினேஷ் என்பவரை கத்தியால் குத்தியும் கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

     இச்சம்பவம் தொடர்பாக தினேஷ் என்பவரின் தந்தை நடராஜன்  குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் குத்தாலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வம் குற்றவழக்கு பதிவு செய்து மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேற்படி வழக்கின் விசாரணையானது இன்று மயிலாடுதுறை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இவ்வழக்கினை விசாரித்த மயிலாடுதுறை சார்பு நீதிமன்ற நீதிபதி கவிதா இவ்வழக்கின் தொடர்புடைய குத்தாலம் காந்தி நகரை சேர்ந்த சரவணன்,ஆபேல்,ஜெயவீரன்,ஆகிய மூவரையும் குற்றவாளிகள் என தீர்மானித்து,மேற்படி குற்றவாளிகளுக்கு தலா நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் தலா 1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.இதையடுத்து குற்றவாளிகள் முவரும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவதாஸ் ஆஜராகி வாதாடினார்.

    இவ்வழக்கினை சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர் சிவதாஸ்,குத்தாலம் காவல் ஆய்வாளர் சுகந்தி,மற்றும் நீதிமன்ற அலுவல் புரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.

    No comments