அத்திக்கடவு அவினாசி திட்டம் நிலை 2 உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் வட்டத்திற்குட்பட்ட பனையம்பள்ளியில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களுக்கு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி தங்கள் பகுதியில் உள்ள குளம் குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து சமுதாய கூடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,
இந்தக் கூட்டத்திற்கு சிறுமுகை காவல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் அக்ரி பழனிச்சாமி , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் , அத்திக்கடவு சம்பத், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அவைத்தலைவர் ராமராஜ், சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெரு. நடராஜன், அமைப்புச் செயலாளர் ஜோதி அருணாச்சலம், மாவட்டத் துணைச் செயலாளர் பழனிச்சாமி, அவிநாசி ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன்,சத்தியமங்கலம் நகரச் செயலாளர் குபேந்திரன் , இயற்கை விவசாயிகள் அணி மாநில துணைச் செயலாளர் மோகன், பவானிசாகர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன் உட்பட பனையம்பள்ளி, சொலவனூர், ஆனைகட்டி, உயிலம்பாளையம், பருசபாளையம், மல்லியம்பட்டி, பாச்சா மல்லனூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முதல் கட்டமாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது, அதன்படி வரும் 28. 2. 2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பனையம் பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் குறைந்தபட்சம் 2000 விவசாயிகள் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
போராட்டத்தை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போராடி வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments