நாகை: கீழையூர் அருகே 25 கிலோ கஞ்சா பறிமுதல்.... இருவர் கைது
நாகை மாவட்டம், கீழையூர் அருகே பிரதாபராமபுரத்தில் சுமார் 25 கிலோ கஞ்சாவுடன் இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கீழையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் தலைமை காவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் அடங்கிய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பிரதாபராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட பெரியார்நகர் செல்லும் சாலையில், சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புதுச்சேரி மாநிலம் கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஞானசேகன் மகன் பிரதீப்(30) மற்றும் பிரதாபராமபுரம் செருதூர் பிஎஸ்என்எல் சுனாமி குடியிருப்பு முகவரியை சேர்ந்த குப்பமுத்து மகன் செல்வம் (39) என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது .மேலும் அவர்கள் கையில் இருந்த 2 பைகளை சோதனை செய்து பார்த்தபோது சுமார் 25 கிலோ கஞ்சா (24. 450 கிலோ கிராம்) இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
No comments