தாம்பரம் மாநகர தெற்கு பகுதி சார்பில் தேமுதிக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் கொடிநாள் கொண்டாட்டம்
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் கொடிநாள் விழா செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக செயலாளர் அனகை முருகேசன் ஆலோசனையின்படி தாம்பரம் மாநகரத்திற்கு தெற்கு பகுதி சார்பில் பகுதி செயலாளர் கேட் எம் தர்மா தலைமையில் பகுதி துணை செயலாளர்கள் டி.ஏழுமலை, ஐ.கே.தர்மா ஆகியோரின் முன்னிலையில் 63வது வட்ட செயலாளர் குமார், வட்ட அவைத் தலைவர் தேன் என்ற லட்சுமி காந்த் வரவேற்புரையில் கிழக்கு தாம்பரத்தில் கொண்டாடப்பட்டது .
வெள்ளிவிழா மற்றும் கொடிநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தேமுதிக கொடியேற்றி பொதுமக்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இதில் பகுதி நிர்வாகிகள் துணைச் செயலாளர் தமிழரசி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை சுஜாதா நந்தினி, பகுதி மாவட்ட பிரதிநிதி பாலமுருகன், பகுதி மகளிர் அணி செயலாளர் டாக்டர் சுமதி, கேப்டன் மன்றம் டாக்டர் நெருப்பூர் ராஜேந்திரன் நிர்வாகி கலைவாணி, ஆறுமுகம், 63வது வட்ட பொருளாளர் பாபு, வட்ட துணை செயலாளர்கள் ஏழுமலை, சரிதா, அசோக், கேப்டன் மன்ற செயலாளர் முருகன், துணைச் செயலாளர் பிரகலாதன், வட்ட பிரதிநிதி விஜி, கார்த்திகேயன், கார்த்தி, குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments