2026 தேர்தல்.... தவெகவுடன் கூட்டணியை உறுதி செய்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில்தான் கூட்டணி என்று நடிகர் விஜய் தெளிவாக அறிவித்துள்ளார். நடிகர் விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியே தமிழக வெற்றி கழகம் 2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்க இருக்கிறது.
அதே சமயத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதாக நடிகர் விஜய் உறுதி கொடுத்துள்ளார்.இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபாவை நேரில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இதைத்தொடர்ந்து முஸ்லிம் லீக் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆதரவு கொடுக்கும் என்று தற்போது அந்த கட்சி தலைவர் முஸ்தபா அறிவித்துள்ளார்.
No comments