வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டியில் கண் சிகிச்சை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது..... 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நாகப்பட்டினம் மாவட்டம்,திருப்பூண்டியில்,வேளாங்கண்ணி ரோட்டரி சங்கம், நாகப்பட்டினம் மிட்டவன் ரோட்டரி சங்கம், நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, திருப்பூண்டி ஜி வெற்றி செல்வி மருத்துவமனை மற்றும் எஸ் எஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
முகாமில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர், 60 நபர்கள் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வேளாங்கண்ணி ரோட்டரி சங்கத் தலைவர் . டி. தமிழ் மாறன், நாகை மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பி வெங்கடேஷ், வேளாங்கண்ணி ரோட்டரி சங்க செயலாளர் Rtn. சபரி தேவன், மற்றும் வேளாங்கண்ணி ரோட்டரி சங்க உறுப்பினர்கள், நாகை மிட்டவுன் சங்க உறுப்பினர்கள், மண்டலம் 1 துணை ஆளுநர் குணசேகரன், மண்டலம் 2 துணை ஆளுநர்Rtn. Er. தமிழ் பிரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ஜி.சக்ரவர்த்தி
No comments