சோழிங்கநல்லூர்: ஈஞ்சம்பாக்கம் 194வது வட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி படகு போட்டி நடத்த திட்டம்
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி ஈஞ்சம்பாக்கம் 194 வது (அ)வட்டம் சார்பில் மார்ச் 9 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி படகு போட்டி நடைபெற உள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை துவக்கி வைக்கவுள்ள நிலையில் இன்று போட்டி நடைபெற உள்ள இடத்தை சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
உடன் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ.அரவிந்த் ரமேஷ்,மண்டல சேர்மன் வி.இ.மதியழகன்,194 வது (அ)வட்ட திமுக செயலாளர் குங்ஃபூ மாஸ்டர் எஸ். கர்ணா,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
No comments