பழனி திருக்கோவில் அலுவலக பொறியாளர் ரூ.18 ஆயிரம் லஞ்சம் பெறும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது
திண்டுக்கல் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அலுவலக பொறியாளர் பிரிவு அயலகப் பிரிவு பொறியாளர் பிரேம்குமார் இவர் ஒப்பந்தக்காரருக்கு ஒட்டன்சத்திரத்தில் திருக்கோவில் சார்பாக கட்டப்பட்ட திருமண மண்டபம் இறுதித் தவணை பணம் ரூ.21 லட்சத்தை விடுவிப்பதற்கு ரூ.18 ஆயிரம் லஞ்சம் பெறும்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக சிக்கினார்.
பொறியாளர் பிரேம்குமாரை திண்டுக்கல் லஞ்சர் ஒழிப்பு துறை டிஎஸ்பி. நாகராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments