திருவள்ளூர்: மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி காமராஜர் திருமண மண்டபத்தில் மனிதநேய மக்கள் கட்சி 17ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி நகரம் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்கள் துவக்கி வைத்தார்.உடன் மாவட்ட கழக நிர்வாகிகள்,ஒன்றிய கழக செயலாளர்,ஒன்றிய கழக பேரூர் கழக நிர்வாகிகள்,மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என முகாமில் கலந்து கொண்டனர்.
No comments