மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக மாபெரும் அரசியல் பயிலரங்கம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் யு.முகமது ரபிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ஐ.அசாரூதீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் எம்.முஹம்மது ரபிக், ஜே.ரஃபிக் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாக்கூப், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல்.சேக் அலி முகம்மது ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு அரசியல் பயிலரங்கம் வகுப்பு எடுத்தார்கள்.
மேலும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன், காஞ்சி மாவட்ட தலைவர் ஜெ.சலீம் கான், மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.தமிம் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எம்.அப்துல் ரஹீம், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியாக தாம்பரம் மத்திய பகுதி இளைஞரணி செயலாளர் எம்.தஸ்தகீர் நன்றி உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments