• Breaking News

    மனிதநேய மக்கள் கட்சி 17ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சுமார் 15 இடத்தில் கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது


    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் பிப்ரவரி 7 மனிதநேய மக்கள் கட்சி 17ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாம்பரம் மத்திய பகுதி சார்பாக மத்திய பகுதி தலைவர் எம்.ஜலாலுதின் அவர்கள் தலைமையில் மத்திய பகுதி செயலாளர் எம்.கே.அப்துல் ரஜாக் அப்துல் சமது அவர்கள் முன்னிலையில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாக்கூப் எம்சி அவர்கள் கலந்துகொண்டு கல்வெட்டு திறந்து கட்சி கொடி ஏற்றி உரையாற்றினார்கள்‌பின்னர் சிறு தொழில் தொடங்க 30 ஆயிரம் நன்கொடையாக நலிந்தவருக்கு வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரங்கநாதபுரம் 4வது தெரு, 2வது தெரு, 3வது தெரு, 7வது தெரு, மகளிர் அணி சார்பாக கஸ்தூரிபாய் தெரு,வ.உ.சி தெரு, காந்தி ரோடு முனை, கிருஷ்ணா நகர் மனோ ஹாஸ்பிடல் சந்திப்பில், கிருஷ்ணா நகர் லட்சுமிபுரம் பேருந்து நிலையம் அருகில், கிருஷ்ணா நகர் சுண்ணாம்பு கால்வாய் அருகில், இரும்புலியூர் GST சாலை, தாம்பரம் இந்து மிஷன் அருகில், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் 3வது வார்டு, காந்தி ரோடு ஜிஎஸ்டி சாலை சந்திப்பில், எம்.ஆர்.எம் சாலை, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது இறுதியாக சண்முகம் சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    உடன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாஹிர்உசேன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எம்.அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாலர் எம்.சபியுல்லா, மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.தமிம் அன்சாரி, மாநில எம்டிஎஸ் பொருளாளர் ஏ.ஆசிக் ஹமீது மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    No comments