இன்றைய ராசிபலன் 16-02-2025
மேஷம் ராசிபலன்
வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்துள்ளதை வைத்து கொண்டு திருப்தி அடைவது நல்ல முடிவு தான். வாழ்க்கையை அப்படியே ஏற்று கொண்டு வாழுங்கள். உங்கள் மனதிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அவநம்பிக்கையைக் குப்பைத் தொட்டியில் வீசுங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவரின் வாழ்க்கையிலும் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்ளுங்கள். இது உங்கள் பிறப்பிலிருந்தே உங்களுடன் இருக்கும் மனப்பான்மை மற்றும் உங்களுக்கே உரிய சிறந்த திறன்களைப் பற்றிய ஆற்றலை அறிய உங்களுக்கு வழங்கும். முன்பை போல் அல்லாமல், தற்போது இந்த உணர்வை நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள்.
ரிஷபம் ராசிபலன்
வாழ்க்கையில் உங்களுக்குப் புரியாத சில சம்பவங்கள் உள்ளன. சிலர் உங்களிடம் ஏன் இரக்கமற்ற முறையில் நடந்த கொள்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நீங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் செல்ல வேண்டும் அல்லது உங்கள் சொந்த அறிவுத் திறனை அதிகரித்துக் கொள்ள இதைக் கவனிக்க வேண்டும். சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உங்களைச் சுற்றி இருக்கலாம். இது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். இது முதலில் ஒரு சுமையாகத் தோன்றினாலும், நீங்கள் அதை நேசிப்பீர்கள்.
மிதுனம் ராசிபலன்
உங்கள் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்து வருகிறது. அவற்றில் பெரும்பாலானவற்றை நீங்கள் சமாளித்து விட்டீர்கள். ஆனால், இனிமேல், உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால், உங்கள் பிரச்சனைக்கு விரைவில் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருங்கள். ஏனெனில், அவர்கள் வாழ்க்கையில் எப்போதும்உங்களுக்குப்பக்கபலமாக இருப்பார்கள். ஓய்வெடுங்கள். உங்கள் உடலையும், மனதையும் ஓய்வாக வைத்திருங்கள். நீங்கள் நீண்ட காலமாக விரும்பியபடி எளிமையாக நடந்து கொள்ளுங்கள்.
கடகம் ராசிபலன்
மக்களை விமர்சன ரீதியாகத் தீர்மானிப்பது மற்றும் சந்தேகத்தின் பலனைச் சாதகமாக வழங்காமல் இருப்பது, உங்களின் வலிமைகளில் ஒன்றான அமைதியை விட்டுவிட்டு இன்று நீங்கள் செயல்களில் இறங்க வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவத் தயாராகவே இருந்திருக்கிறீர்கள், மற்றவர்கள் உங்களுக்கு அரிதாக சில நேரங்களில் மட்டுமே உதவுகிறார்கள் என்பதை நீங்கள் கண்டறிந்துள்ளீர்கள். அதிக நேரம் வேலை பார்ப்பதாக நீங்கள் உணர்ந்தால், ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள்.
சிம்மம் ராசிபலன்
சமீபத்தில், அனைத்துவிதமான மன அழுத்தங்களும், பதட்டமும் சேர்ந்து உங்கள் உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. நீங்கள் ஒவ்வாமை அல்லது நாட்பட்ட நோயினை எதிர்த்துப் போராடுபவராக இருந்தால், வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய முடிவுசெய்ய இது சரியான தருணமாகும். நேர்மறையானவற்றை சொல்வதற்கு இயலாத நபர்களிடமிருந்து விலகியே இருங்கள். உங்களைச் சுற்றிலுமுள்ள நபர்கள் உங்களது மனதிற்கு எதிர்மறையானவற்றையே அளித்துள்ளனர். இன்று, ஆகச்சிறந்த முடிவுகளை எடுக்கும் முன்பு, உங்கள் உள்ளுணர்வுகளை முன்பை விட தற்போது அதிகம் நம்ப வேண்டும்.
கன்னி ராசிபலன்
இந்த நாளில் உங்களுக்குப் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. இது அன்பானவரிடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பதாகவும் இருக்கலாம். உங்கள் மனது நொறுங்குவதை விரும்பவில்லை என்றால், உங்கள் நம்பிக்கையை மிக அதிகமாகப் வைக்க வேண்டாம். சில சமயங்களில், நீங்கள் காயப்படுவீர்கள் என்ற பயத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களிடமிருந்து மறைத்து வைத்திருக்கும் விஷயங்களின் உண்மையை நீங்கள் கண்டுபிடிக்கலாம். அவர்கள் உங்கள் மனதைப்பற்றி அக்கறை கொண்டிருந்தாலும், உங்கள் மனம் உடைந்திருக்கலாம். மனம் திறந்து பேசினால், தீர்க்க முடியாதது ஒன்றும் இல்லை.
துலாம் ராசிபலன்
எதையும் உங்கள் வழியில் குறுக்கிடச் செய்யும் மனநிலையில் நீங்கள் இல்லை. வெற்றி என்பது மட்டுமே வெற்றிகரமாக இருப்பதற்கான ஒரே நடவடிக்கை அல்ல என்பதை நீங்கள் நினைவிற் கொள்ள வேண்டும். அந்தவகையில், நீங்கள் இடையே பெறும் அனுபவங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. உங்களிடம் அமையப்பெறாத விஷயங்களைப் பற்றி பழிபோடவோ, பேசவோ இது நேரமல்ல. மனநிறைவினை அடைவதை பயிற்சி செய்து, நேர்மறையான விஷயங்களைப் பற்றி பேசுங்கள். உங்கள் வாழ்க்கையிலிருந்து சில விஷயங்களை விட்டொழிக்க வேண்டும். அவை உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் பறிக்கும் விஷயங்களாகும்.
விருச்சிகம் ராசிபலன்
இன்றைய நாளில், அமைதியான மற்றும் செறிவுமிகுந்த எண்ணங்களால் உங்களது வாழ்க்கை நிறைந்திருக்க வேண்டும். இன்று, உங்களை நீங்களே வழிநடத்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு உண்மையிலேயே தேவையானவைகள் தான், உங்களது வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வார இறுதியில், உங்களை நீங்களே நன்கு கவனித்துக்கொள்ள திட்டமிடுங்கள். மேலும் முன்னேறுங்கள். வாழ்க்கையில் குற்றஉணர்வின்றி மகிழுங்கள். ஏனென்றால், வெற்றி மற்றும் அதிர்ஷ்டதிற்கான அலைகள் உங்களது வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கின்றன.
தனுசு ராசிபலன்
கடந்த காலங்களில் நீங்கள் பிடிவாதமாக இருந்ததால், பல சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது. நீங்கள் குழப்பத்தில் இருப்பதை விரும்பவில்லை என்றால், எந்த வகையிலும் குழப்பத்தில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள். ஒருவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிய பின்னர், அவருடன் மீண்டும் பேசுவதும் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அவரிடம் மன்னிப்பு கேட்பது உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது, மன்னிப்பு கேட்பதால், நீங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப் படுத்துங்கள். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டிகள் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வெளிச்சம் காட்டும் விளக்காக இருப்பார்கள். தேவைப்பட்டால் அவர்களிடம் உதவி கேட்கப் பயப்பட வேண்டாம்.
மகரம் ராசிபலன்
மன்மத அன்பு உங்கள் வாழ்க்கையில் பாய்ந்து மகிழ்ச்சியை உண்டாக்கப் போகிறது. ஆனால், அந்த மகிழ்ச்சி, நீங்கள் எதிர்பாராத வகையில் உங்களை மகிழ்விக்கும். எனவே, இந்த மகிழ்ச்சியைப் பார்த்து மற்றும் கேட்டு மகிழத் தயாராக இருங்கள். ஒரு நபர் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைக் கூறி ஆச்சரியப் படுத்தலாம். இந்த செய்தி உங்களுக்குப் பெரியளவிலான மகிழ்ச்சியை உண்டாக்கும். இதுமட்டுமின்றி சில நட்பிணக்கமற்ற உறவுகளைச் சரிசெய்து கொள்வதற்கு இது ஒரு நல்ல தருணமாக உங்களுக்கு இருக்கும். அவர்களால் உங்கள் மனதில் உண்டான சோகம் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தி அவர்களை மன்னித்து விடுங்கள். ஒரே இடத்தில் இருக்காமல் அடுத்த நிலைக்குச் செல்லுங்கள்.
கும்பம் ராசிபலன்
உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றிட முடிவு செய்யுங்கள். உங்கள் மனத்தை நேர்மறையான விஷயங்களில் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். உங்கள்சவால்களைப்புத்திசாலித்தனமாகத்தேர்வு செய்யுங்கள். உங்கள் நேரத்திற்கு மதிப்பு இல்லாத விஷயங்களுக்குப் பின்னால், உங்கள் ஆற்றலை வீணாக்காதீர்கள். உங்கள் வாழ்க்கை பயணத்தில் வரும் புதிய வாய்ப்புகளுக்கு இன்னும் காத்திருக்கிறது. இந்த வாய்ப்புகளை அடைய இன்றுஉங்களுக்குக்கிடைக்கும் நேர்மறை ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மீனம் ராசிபலன்
யாரோ ஒருவர் உங்களுக்குத் துரோகம் இழைத்திருக்கலாம், அவர்களின் நடத்தையால் நீங்கள் மிகவும் வேதனைப்பட்டு இருக்கலாம் அல்லது அதிர்ச்சி அடைந்து இருக்கலாம் . ஆனால், இந்த துரோகத்திலிருந்து நீங்கள் நன்கு பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, அந்த துரோகத்தை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. நீங்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது உங்கள் குடும்பமே உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று உங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தயங்க வேண்டாம். ஒருவேளை அந்த நபருக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்க நீங்கள் விரும்பினால், அந்த வாய்ப்பை வழங்குங்கள், ஆனாலும், மனக்கண்ணால் தொடர்ந்து அவரை கண்காணித்துக் கொண்டே இருங்கள்.
No comments