கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே பெருவாயல் டி .ஜெ.எஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டை அருகே பெருவாயல் பகுதியில் டி.ஜெ.எஸ் இன்ஜினியரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,டி.ஜெ.எஸ் கல்விக்குழுமத்தின் தலைவரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கல்வி நெறி காவலர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.
அனைவரையும் டி.ஜெ.எஸ் இன்ஜினியரிங் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ.பிரகாஷ் வரவேற்றார்.கல்விக் குழுமத்தின் மேலாண்மை இயக்குனரும்,செயலாளருமான டி.ஜெ.ஆறுமுகம்,கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் டி.ஜெ.தேசமுத்து,டி.ஜெ.எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனி,டி.ஜெ.எஸ் கல்விக்குழுமத்தின் இயக்குனர்கள் ஏ.விஜயகுமார், ஏ.கபிலன்,டி.தினேஷ்,டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் டி.ஜெ.எஸ்.ஜி.தமிழரசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த டாக்டர் பி.சண்முகம் கலந்து கொண்டு 419 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், உறுப்பினர்கள் எஸ்.சண்முகசுந்தரம், ஆர்.ஜெயக்குமார், ஏ.ராஜேஷ்,டிஜெஎஸ் கல்வி குழுமத்தின் நிர்வாக அதிகாரி எஸ்.ஏழுமலை,டி.ஜெஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.லட்சுமிபதி, துறை தலைவர்கள் பேராசிரியர் சண்முகசங்கரி, முனைவர் அர்ஜுனன், முனைவர் சுப்ரமணியன், பேராசிரியர் செந்தில்குமார், பேராசிரியர் கவியரசன், முனைவர் சத்யபிரியாவேல்முருகன், பேராசிரியர் முரளி,முனைவர் சிவக்குமார் மற்றும் இருபால் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments