சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்.... பெரியார் கும்பலை சேர்ந்த 10 பேர் கைது.....
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி சமீப காலமாக அவதூறாக பேசி வருகிறார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது பெரியாரை சர்ச்சையான வார்த்தைகளால் விமர்சித்தார். அதாவது பெண்ணுரிமை மற்றும் சமூக நீதி போன்றவைகளுக்கும் பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கூறிய சீமான் பாலியல் இச்சை வரும்போதெல்லாம் தாய் மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று பெரியார் சொன்னதாக கூறினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பெரியார் அமைப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். சீமானுக்கு எதிராக அவருடைய வீட்டில் முன்பாக பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த அமைப்பினர் போராட்டம் கூட நடத்தினார்கள்.
சீமான் பெரியார் வைத்திருப்பது வெங்காயம் என் தலைவன் பிரபாகரன் வைத்திருப்பது வெடிகுண்டு. பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது நான் வெடிகுண்டை வீசுவேன் என்று கூறினார். இதனால் வன்முறையை தூண்டும் விதமாக சீமான் பேசியதாக கூறி அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் சீமான் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக கூறி தற்போது பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 10 பேரை ராயப்பேட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சீமான் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவலின் பெயரில் 10 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு இந்த சதிதிட்டத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments