• Breaking News

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 100 % லஞ்சம் இல்லாத துரித மக்கள் சேவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சுயேச்சை வேட்பாளர் தேர்தல் வாக்குறுதி


    ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது இத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். அனைத்து வேட்பாளர்களும்  மக்களை சந்தித்து  பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

     இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சிகிச்சை வேட்பாளர் டாக்டர் T.S. செல்லகுமாரசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு 82 தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளார் அதில் குறிப்பிடத்தக்கதாக குடும்ப அட்டை கிடைக்காத அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உடனடியாக குடும்பத்தை கிடைக்க அவன் செய்யப்படும் எனவும் ஈரோடு மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய சாலை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தினசரி மக்கள் குறை தீர்க்கும் மையம் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அரசு வணிக வளாகங்களில் உள்ள கடைகளை கட்சி பாகுபாடு இன்றி தகுதியான தொழில் முனைவோருக்கு உரிய வாடகைக்கு உடனடியாக வழங்க வழிவகை செய்யப்படும் எனவும் 100 சதவீதம் லஞ்சம் இல்லாத துரித மக்கள் சேவை கிழக்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் பெற ஆவண செய்யப்படும் என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைவேட்பாளர் டாக்டர். செல்லகுமாரசாமி T.S தான் கிழக்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்களுக்கு  அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார். 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments