டெல்லியில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் பெண் தாதா கைது
டில்லியின் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு நேற்று போதைப்பொருள் தொடர்பான வழக்கில் குண்டர் ஹஷிம் பாபாவின் மனைவியை கைது செய்தது. அவரிடம் இருந்து சர்வதேச சந்தையில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 270 கிராம் ஹெராயினை மீட்டனர்.
ஆடம்பர விருந்துகள், மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய ஸோயா கானை கைது செய்ய போலீசார் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தனர். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் தப்பித்து வந்த நிலையில். ஒரு ரகசிய தகவலின் பேரில், வடகிழக்கு டில்லியின் வெல்கம் பகுதியில் போதைப்பொருள் சப்ளை செய்யும் போது ஸோயா கானை கைது செய்தனர்.ஹஷிம் பாபா, பல கொலை, மிரட்டி பணம் பறித்தல் வழக்குகளில் திகார் சிறையில் உள்ளார். ஹாஷிம் பாபாவின் மூன்றாவது மனைவியான ஸோயா, தனது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு 2017ல் அவரை மணந்தார்.
காவல்துறையினரின் பார்வையில் இருந்து விலகி தனது சட்டவிரோத தொழிலை நிர்வகித்த பாதாள உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்க்கரைப் போலவே சோயாவும் உலா வந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையில் ஸோயா கான் முசாபர்நகரில் இருந்து போதைப்பொருட்களை விநியோகிக்க கொண்டு வந்ததாக தெரியவந்தது. நாதிர் ஷா கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் சிறப்பு பிரிவு சந்தேகிக்கிறது,
ஸோயாவின் குடும்பப் பின்னணியும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையது. அவரது தாயார் 2024ம் ஆண்டு பாலியல் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார், அவரது தந்தை போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments