கொச்சியிலிருந்து ஒரு லாரி எல்பிஜி கேஸ் ஏற்றி வந்தது. இந்த லாரி இன்று காலை கோயம்புத்தூர் மாவட்டம் உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த லாரி விபத்துக்குள்ளானதில் எல்பிஜி டேங்கர் தனியாக கழன்று கீழே விழுந்தது.இதிலிருந்து தற்போது கேஸ் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியை சுற்றி சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேஸ் சிலிண்டர் வெளியேற்றிக் கொண்டிருப்பதால் தீயணைப்பு துறையினர் அதன் மீது தொடர்ந்து தண்ணீரை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
0 Comments