கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை விபி மாலி ஆய்வு
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மழை காரணமாக நெற்பயிர்கள் வாயில் சாய்ந்த நிலையில் பயிர் பாதிப்பு குறித்து கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டிருப்பு பகுதியில் கீழ்வேளூர் எம்எல்ஏ வி.பி நாகை.மாலி ஆய்வு: மழை நீரில் அழுகி முளைக்கும் நிலையில் உள்ள நெற்பயிர்களை விவசாயிகள் கையில் எடுத்து காண்பித்து வேதனை.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து மழை நீரில் மிதந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் ஒருபோக சாகுபடியாக சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் மழையால் பயிர் பாதிக்கப்பட்ட இடங்களை சிபிஎம் சட்டமன்ற குழு தலைவரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி. நாகை மாலி எம்எல்ஏ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாட்டியக்குடி, இறையான்குடி வடக்குப்பனையூர், தெற்குப்பனையூர், வல்ல விநாயக கோட்டகம்,ராமன்கோட்டகம்,நாட்டிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஒரு சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பிநெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. குறிப்பாக நாட்டிருப்பு பகுதியிலுள்ள விவசாய விளை நிலத்தில் மழை காரணமாக சாய்ந்த நெல் கதிர்கள் அழுகி முளைத்து வருவதாக விவசாயிகள் அதனை கையில் எடுத்து எம்எல்ஏவிடம் காண்பித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆய்வினை தொடர்ந்து கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மாவட்டம் முழுவதிலும் கடந்த இரண்டு தினங்களாக கடுமையான மழை பெய்துள்ளது, கடந்த மூன்று மாத காலமாக விவசாயிகள் அல்லும் பகலும் சிரமப்பட்டு உழைத்த நெற்பயிர்கள் திடீரென பெய்த கனமழையால் வயல்வெளியில் சாய்ந்துள்ளது, தமிழ்நாடு அரசு மாவட்டம் முழுவதிலும் உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 35,000 வழங்க வேண்டும். மேலும் அறுவடை செய்யப்படும் நெல்லில் இருப்பதும் அதிகமாக இருக்கும். ஆகவே கொள்முதல் செய்யப்படும் நெல்லின் இறப்பத சதவீதம் 17 சதவீதத்திலிருந்து 22 % ஆக நிர்ணயம் செய்ய மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இயற்கை சீற்றங்களின் போது மத்திய குழு வருகை என்பது சம்பிரதாய வருகையாகவும் இதனால் விவசாயிகளுக்கு எந்த வித நன்மையும் இதுவரை இல்லை என குற்றம் சாட்டிய அவர், ஒவ்வொரு முறையும் மத்திய குழு வருகை என்பது விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயனளிக்காத வகையிலேயே உள்ளது. மத்திய குழு வருகை என்பது கண்துடைப்பாக இல்லாமல் விவசாயிகள் எதிர்பார்க்கின்ற 22 சதவீத ஈரப்பதத்தை இந்த முறையாவது பரிந்துரை செய்து தர வேண்டும் என்றார்.
ஆய்வின் போது, விவசாய சங்க மாவட்ட தலைவர் எம்.என். அம்பிகாபதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மக்கள் நேரம் எடிட்டர்
நாகை மாவட்ட நிருபர்
ஜி. சக்கரவர்த்தி
No comments