• Breaking News

    சட்டப்பேரவையில் எடப்பாடியார் பேசிய வீடியோவை ஸ்டாலின் வெளியிட்டால் நான் அரசியலை விட்டே ஒதுங்குகிறேன் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்


    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கம்பம் ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் எம் ஆர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன், கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.மேலும் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேசுகையில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நமது பொதுச் செயலாளர் எடப்பாடியார் தனது உடல்நிலை சோர்வையும் பொறுப்பெடுத்தாது 3 மணி நேரம் திமுக அரசை பார்த்து மக்களின் பிரச்சனைகள் குறித்து கேள்விகளை எழுப்பினார். ஆனால் அவற்றை திமுக அரசு நேரலையில் காட்டவில்லை எனவே அவர் பேசிய வீடியோவை திமுக  ஸ்டாலின் அரசு வெளியிடுவாரா அவ்வாறு அவர் வெளியிட்டால் நான் அரசியலை விட்டு வெளியேறி விடுகிறேன் என பொதுக்கூட்டத்தில் சவால் விட்டு பேசினார்.

    No comments