தை அமாவாசையை முன்னிட்டு அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு
திண்டுக்கல், நிலக்கோட்டை அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க கோவிலாகும். இக்கோவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பரிகார ஸ்தலமாக விளக்குகிறது.
தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள இந்த அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் வைகை ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.பாதுகாப்பு பணியில் நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் 100 மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments