ராணிபேட்டை: இருவர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..... கேட்க நாதியில்லை என திருமாவளவன் நினைக்கிறாரா..? பாமுக தலைவர் பாரதராஜா யாதவ் எச்சரிக்கை


 யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள நெல்வாய் கிராமத்தினை  சேர்ந்தவர்கள் சூர்யா என்ற தமிழரசன்,இவரது நண்பர்  விஜயகணபதி ஆகிய இருவரும் கடந்த 16 ம் தேதி திருமால்பூரில்  நின்று பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர்.அப்போது அங்கு   திருமால்பூரை சேர்ந்த பிரேம்,மணிகண்டன் ,கோபி,வெங்கடேசன்,இன்னும் சிலரும் ஒன்று சேர்ந்து வந்து தமிழரசனையும் ,விஜய கணபதியையும் சாதிப்பெயரை சொல்லி திட்டி இங்கேயிருந்து ஓடாவிட்டால் இருவரையும் உயிரோடு பெட்ரோலை ஊற்றி கொளுத்தி போடுவோம் என்று  கையில் வைத்திருந்த பெட்ரோலை காட்டி மிரட்டியிருக்கின்றனர்.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரேமும்  அவருடன் வந்த மற்றவர்களும் சேர்ந்து தமிழரசன் மீதும்,விஜயகணபதி மீதும் பெட்ரோலை ஊற்றி கொளுத்திவிட்டு ஓடி போய் விட்டனர்.

கடுமையான  தீக்காயத்துடன் தமிழரசன் ,விஜய கணபதி ஆகிய  இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பாதிக்கப்பட்ட தமிழரசன் யாதவ சமுதாயத்தினையும்,விஜய கணபதி மாற்று சமுதாயத்தினையும் சேர்ந்தவர்களாவர்.

கொளுத்திய பிரேம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் எனறும் அவர் மீது பல கொலை வழக்குகளும் உள்ள சரித்திர  பதிவேடு குற்றவாளி என்றும் சொல்லப்படுகின்றது.

தகவலை அறிந்த பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாசு ஐயாவும்,அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்பு மணி ராமதாசும் உடனடியாக  தமிழரசன்,விஜய கணபதியை கொளுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .இல்லாவிட்டால் கடும் போராட்டம் நடத்தப்படும் என் எச்சரித்தனர்.

இதனைக்கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தாமாகவே முன்வந்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் வன்னியர் யாரும் இல்லை.அதே நேரம் சம்பவத்தில் ஈடுபட்ட எவரும் தமது கட்சியை சேர்ந்தவர் இல்லை.தமது சாதியையும் சேர்ந்தவர் இல்லை.அப்படியிருக்க வடமாவட்டங்களில் சமூக  பதட்டத்தினை உருவாக்க பா.ம.க நிறுவனரும்,தலைவரும் நினைக்கிறார்கள்.இதனை யாரும் நம்பவேணாம் என்று டிவிட்டரில் அறிக்கை விட்டார்.அப்போ யாதவரையோ மாற்று சமுதாயத்தினரையோ கொளுத்தலாமா, யாதவரை  கொளுத்தியதை கேட்க நாதியில்லை என்று திருமாவளவன் நினைக்கிறாரா ?.

யாதவர்கள் அமைதியாகவே இருப்பார்கள் எனறும் நினைக்கிறார்களா திருமாவளவனின் அறிக்கை அனைத்து தரப்ப்பிலும் அதிருப்பியை ஏற்படுத்து விட்டது.சம்பவத்தில் ஈடுபட்டவர் தமது கட்சி மற்றும் தமது சாதியை சேர்ந்தவர் இல்லையென்றால்,குற்றவாளிகளுக்கு எதிராக கண்டன அறிக்கையாவது திருமாவளவன் கொடுத்திருக்கலாமே.இவ்விசயத்தில் ஏதோ.ஒரு வகை பதட்டத்தில் அவர் இருக்கின்றார் என்றும்,சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை  காப்பாற்ற முயற்சிக்கின்றாரோ என்ற ஐயம் அனைவருக்கும் ஏற்படுகின்றது.

நல்ல தலைவராக வளர்ந்து வரும் திருமாவளவன்  இவ்விசயத்தில் பொதுவான தலைவராக செயல்பட்டிருக்க வேண்டும்.தவறு செய்தவர்கள் எவராயினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுதியிருக் கவேண்டும்.கண்டித்திருக்க வேண்டும்.

அதனை செய்யாமல் பழியை பா.ம.க மீது திணிக்க முயற்சிப்பது அழகல்ல. பாதிக்கப்பட்டவர்கள் தமது சாதியை சேர்ந்தவராக இல்லையெனினும் அவர்களுக்காக போராடும் பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸையும்,தலைவர் மருத்துவர் அன்புமணியையும் பாராட்டுகின்றோம்.தேவையெனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க பா.ம.க.வினருடன் யாதவ சமுதாயத்தினரும் சேர்ந்து போராட தயங்க மாட்டார்கள்.

இதுவரை சரித்திர பதிவேடு குற்றவாளி பிரேமையும்,இன்னொருத்தரையும் மட்டுமே காவல்துறையினர் கைது செய்துள்ளனர் மீதமுள்ள மணிகண்டன்,கோபி,வெங்கடேசன்,அடையாளம் தெரியாத 6 பேரையும் காவல்துறை கைது செய்யவில்லை.தமிழக காவல்துறை தலைவர் திரு.சங்கர் ஜூவால் அவர்கள் இவ்விசயத்தில் நேரடியாக தலையிட்டு உடனடியாக குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் எத்தகைய நபராகினும் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போன்ற சட்டப்பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டுகின்றோம்.

இவ்வாறு தமது அறிக்கையில் பாரதராஜா யாதவ் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments