வெள்ளி திருப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சனி சந்தை பகுதியில் அந்தியூர் போக்குவரத்து காவல்துறை காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் வாகன சோதனை


ஈரோடு மாவட்டம், வெள்ளி திருப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சனி சந்தை பகுதியில் அந்தியூர் போக்குவரத்து காவல்துறை காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபடும் போது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்தவர்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைகவசம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும்.

 இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்ட கூடாது. குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது. செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்ட கூடாது. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்ட கூடாது. என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் மெய்யழகன் ஆகியோர் உடனிருந்தனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments