தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் போட்டி ஆண்களுக்கு இணையாக பெண்களும் போட்டி போட்டு இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பங்கேற்பு


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகவும் பண்டைய காலங்களில் ஆண்களுக்கு பெண் கொடுக்க விரும்புபவர்கள் இளவட்ட கல்லை தூக்கினால் தான் பெண் கொடுப்போம் என்கிற நிலை இருந்ததாகவும் கூறப்படும் நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்ட கல்லை தூக்குவோம் என தூக்கி காட்டி சாதித்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் தைப்பொங்கல் திருவிழாவை ஒட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்று வருகிறது.

 67 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்கள் தூக்கி வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் இரு பிரிவுகளில் 47 கிலோ மற்றும் 67 கிலோ எடை கொண்ட கற்களை வைத்து இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது.47 கிலோ கல்லை பெண்கள் பலர் சர்வ சாதாரணமாக தூக்கியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கல் தூக்கியவர்கள் மட்டுமே 67 கிலோ எடை கொண்ட பிரிவில் கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் ஐந்து பெண்கள் 67 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த பவதாரணி என்ற பெண் இரண்டு முறை 67 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை தூக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். இதே போல் முன்னதாக நடந்த ஆண்கள் பிரிவு இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் கஜா கோபி என்பவர் 67 கிலோ கொண்ட கல்லை எட்டு முறை தூக்கியும்,கார்த்திக் என்பவர் ஏழு முறை தூக்கியும் சாதனை படைத்தனர்.


 அழிந்து வரும் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக உள்ள இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சியை தமிழக அரசு அழிந்து விடாமல் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட பெண்கள், பார்வையாளராக வந்திருந்தவர்கள் என பலரும் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் பெண்கள் இளவட்டக்கல் தூக்கும் போட்டி திருச்செங்கோட்டில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே இளவட்டக்கல் தூக்கி வந்த நிலையில்முதல் முறையாக இந்த ஆண்டு பெண்களையும் இளவட்டக்கல் தூக்க அனுமதி கொடுத்த நெசவாளர் காலனிஊர்நல கமிட்டியினர் மற்றும் பொங்கல் விழா குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர். 

கயிறு இழுத்தல் வாலிபால் கிரிக்கெட் கரலாக்கட்டை சுற்றுதல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்ற போது அனைத்தும் ஆண்களுக்கே என இருந்த நிலையில் முதல் முறையாக இளவட்டக்கல் தூக்கும் போட்டியை பெண்களுக்கும் என அறிமுகப்படுத்தியுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்டதை பலரும் பாராட்டி வாழ்த்தினார்கள்.

போட்டிகளை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபுஆகியோர் துவக்கி வைத்தனர் நிகழ்ச்சியில்ஊர்நல கமிட்டி தலைவர் சண்முகம், பகுதி நகர் மன்ற உறுப்பினர்மற்றும் ஊர் நல கமிட்டி செயலாளர் ராஜா,இளவட்டக் கல் விழா நண்பர்கள் குழு பாஸ்கர் சின்னதுரை பிரபாகரன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஜெ.ஜெயக்குமார் நாமக்கல் மாவட்டம்


Post a Comment

0 Comments