திருக்கோயில் யூனியனின் சென்னை கோட்டம் தாம்பரம் - பல்லாவரம் பகுதி கிளை நிர்வாகிகளின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைகான ஆலோசனை கூட்டம்


தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் சென்னை கோட்டம் நிர்வாகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காண தாம்பரம் - பல்லாவரம் பகுதி கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கிளைச் செயலாளர் ராகவ பட்டாச்சாரி தலைமையில் கிளை தலைவர் மாடம்பாக்கம் சம்பத் முன்னிலையில் நேற்று மதியம் தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் கோதண்ட ராமர் திருக்கோயில் வளாகத்தில் கிளையின் மகளிர் அணி செயலாளரும் தமிழகத்தின் முதல் பெண் ஓதுவாருமான  சு.சுஹஞ்சனா இறை வணக்கத்துடன் கூட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணி செயலாளர்  எஸ்.செந்தமிழ் செல்வி கலந்துகொண்டு இக்கூட்டத்தினை துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.மேலும் இக்கூட்டத்தில் சென்னை கோட்டத்தின் செயல் தலைவர் எஸ். கீர்த்திவாசன் குருக்கள், சென்னை கோட்ட தலைவர் எஸ்.தனசேகர், செயலாளர் தாம்பரம் இரா.இரமேஷ், பொருளாளர் க.வெங்கடேசன், அமைப்பாளர் எஸ்.சிவகாமி உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments