இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் ஆங்கில முதுநிலை ஆசிரியர் சரவணன் என்பவர் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்த விசாரணைக்காக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது மாணவிகளின் பெற்றோர் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவிகளும் ஆசிரியர் சரவணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments