ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..... நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு


 ஈரோடு கிழக்கு தொகுதி காங். எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அண்மையில் காலமானார். அவரது மறைவை அடுத்து அத்தொகுதியை காலியானதாக அறிவித்த தேர்தல் ஆணையம், வரும் பிப்., 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

ஜன. 10ம் தேதி முதல் ஜன.17 வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். ஜன.18ல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஜன.20ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் தி.மு.க., வேட்பாளர் சி.சந்திரகுமார் களத்தில் உள்ளார்.முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தே.மு.தி.க., மற்றும் பா.ஜ., தேர்தலை புறக்கணித்துள்ளன. ஆனால் நாம் தமிழர் கட்சி உறுதியாக போட்டியிடும் என சீமான் கூறியிருந்தார். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் இன்று(ஜன., 14) நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்த கட்சி சார்பில் சீதாலட்சுமி களம் இறங்குகிறார். இது குறித்து கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி போட்டியிடவிருக்கிறார்.

இவர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவருக்கு நாம் தமிழர் கட்சியினர் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments